சக ஊழியருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்

0 1,414
Stalin trichy visit

 

திருச்சி, அக். 24 ஆயுதபூஜை போது சாமி கும்பிட்ட மற்றும் வீட்டிற்கு பொருள்கள் வாங்க என்று பணம் வசூல் செய்வார்கள்

ஆயுத பூஜையை முன்னிட்டு சாமி கும்பிட மற்றும் வீட்டிற்கு பொருள்கள் வாங்க ரயில்வே தொழிலாளர்கள் தங்களுக்குள் பணம் வசூல் செய்வார்கள். அதன்படி ஆயுத பூஜைக்காக பணம் வசூல் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில் மீதம் இருந்த பணத்தில் வீட்டிற்கு பொருட்கள் வாங்காமல் பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில் வேலை செய்து தற்போது விபத்தில் சிக்கிய 8 மாதமாக ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக தொழிலாளி ஆர்.சீனிவாசன் (45) குடும்பத்திற்கு ரு.10,400யை வழங்கினார்கள். (8 மாதமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் சம்பளம் இல்லை. வந்த போனஸ் தொகையும் வங்கியில் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில்  தன் குடும்பம் , தன் சுகம் என்ற சுயநலம் இல்லாமல் தன்னுடன் பணிபுரியும் குடும்பம் கஷ்டத்தை உணர்ந்து ஆயுதபூஜை சாமி கும்பிட தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு ஆயுதபூஜை போட்டுவிட்டு மீது இருந்த (10400 ரூபாய் ) பணத்தை சீனிவாசன் மனைவியிடம் கொடுத்தார்கள்.

நட்பு என்பது துன்பங்களை துடைப்பதாக இருக்க வேண்டும். நண்பர்கள் உதவி கேட்க தயங்கி நிற்பார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களிடம் கேட்காமலே அவர்களுடைய துன்பங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். என எடுத்துகாட்ட விளங்கி பொன்மலை ரயில்வே டீசல் பிரிவு கள் மார்டின், பத்மநாபன், திருமுருகன், செல்வராஜ், கே.சி. நீலமேகம், பெரியசாமி, சேதுராமன், செந்தில், உதயகுமார், ஐஸ்டின் ராஜா, நளினி, காளியப்பன் , உலகநாதன், ஸ்ரீவசன், மற்றும் டீசல் பிரிவு நண்பர்கள்

Leave A Reply

Your email address will not be published.