மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு பேரணி
திருச்சி, ஏப்.10 மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சமண சமயத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இன்று பேரணியாக சென்றனர்.
திருச்சி மலைக்கோட்டையில், மகாவீரர் வழியில் சிறா முனிவர் என்ற சமணத் துறவி 2200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளார்.
அவர் அறப்பள்ளியை நடத்தி,நான்கு விதமாக மனிதர்களை பிரித்து கடைநிலை மக்களின் வாழ்வாதாரத்தை பறித்த, வருண கொள்கைகளுக்கு எதிராக,
உணவு தானம் , கல்வி தானம், புகலிட தானம். மருத்துவ தானம்
முதலியவற்றை எளிய மக்களுக்கு வழங்கியுள்ளார்.
அவரது பெயரில் திரு என்ற அடைமொழியை இணைத்துக்கொண்டு, இந்த மண் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டுவருகிறது.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, சிறா முனிவர் வாழ்ந்த இன்றைய திருச்சி மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில், சமண சமயத்தினர் 200க்கும் மேற்பட்டோர் இன்று பேரணியாக சென்றனர். மகாவீரர் சிலையை சுமந்துக்கொண்டு சென்றவர்கள் அச்சிலைக்கு மலர்தூவி வழிபாடும் செய்தனர்.
திருச்சி குஜீலித்தெருவில் தொடங்கிய பேரணி,பெரிய கடைவீதி வழியாக தொடங்கிய இடத்தை வந்தடைந்தது.
உயிர்களை பலியிடும் சடங்குகளை முன்னிறுத்தி வேத மதங்கள் இயங்கிய காலத்தில், அதற்கு மாற்றாக, ‘வாழ், வாழ விடு’ என்கிற அடிப்படை கருத்தியல் கோட்பாட்டை முன்னிறுத்தி, மக்களிடம் சம மன நிலை கொண்டு வாழும் கலையை போதித்தவர் மகாவீரர். அதனை நினைவுபடுத்தி போற்றும் விதமாக அனைவருக்கும் இன்று திருச்சி பெரியக்கடைத்தெருவில் உணவு தானம் வழங்கப்பட்டது.