நல்லாண்டவர் கோவிலில் சித்திரை முதல்நாள் பஞ்சாங்கம் வாசிப்பு

0 460
Stalin trichy visit

திருச்சி, ஏப். 15  மணப்பாறை அருகே நல்லாண்டவர் கோவிலில் சித்திரை முதல்நாள் பஞ்சாங்கம் வாசிப்பு.

ஶ்ரீவிசுவாவசு ஆண்டில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு அளவுக்கு அதிகமான வருவாய் கிடைத்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
சித்தா, ஆயுர்வேதத்தில் தமிழ்நாடு முதலிடம் பெறும் என கணிப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே மாமுண்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிகவும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் மான்பூண்டி நல்லண்டவருக்கு முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திக்கு முன் பஞ்சாங்க பலன் வாசிக்கப்பட்டது. அதன்படி இந்த ஶ்ரீவிசுவாவசு ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அளவுக்கு அதிகமான வருவாய் கிடைத்து அதன்மூலம பல சட்ட திட்டங்களை நிறைவேற்றநேரும். நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நடைபெறும். வெளிநாட்டில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர். இஸ்ரேல், பாலஸ்தீனம் கடும் பாதிப்பு ஏற்படும். ஆன்லைன் வர்த்தகத்தில் பல மோசடிகள் நடைபெறும். மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும். அயல்நாட்டின் ஒத்துழைப்புடன் பல புதிய தொழிற்சாலைகள் பல்வேறு மாவட்டங்களில் அமைக்க நேரும். காவல் துறையில் பல புதிய மின்னனு கருவிகள் பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க நேரும். சித்தா, ஆயுர்வேதத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கும்.
பொதுமக்களிடையே பணபுழக்கம் இருக்காது என்பதால் பொருளாதாரம் முன்னேற்றம் இருக்காது. எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருந்ததை சுவாமியின் முன்பு கோவில் அர்ச்சகர் கண்ணன் வாசித்ததைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவமூர்த்தி தேரில் எழுந்தருளி ஆலய உட்சுற்று நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.