நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
திருச்சி, பிப்.10 திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கான ஒருங்கிணைந்த பொது விநியோகத்திட்ட மேலாண்மை புத்தாக்கப்பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புஅலுவலர் சுப்பையா, வட்டாட்சியர் ராஜவேல், வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.