அறுசுவை உணவுடன் மாணவர்களோடு உணவருந்திய ஆசிரியர்கள்; திருச்சி அருகே அரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்!
சட்டென இலகிவிடும் மனம் படைத்தோரை குழந்தை மனம் கொண்டவன் என்றுதான் நாம் அனைவருமே கூறுவோம். கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான்.

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டியை அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி காருகுடி அரசு உயர் நிலைப்பள்ளி இன்று குழந்தைகள் தின விழா கோலாகலமாக் கொண்டாடப்பட்டது. பள்ளி முழுவதும் வண்ண வண்ண கோலங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டின் நவம்பர் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சார்பில் மாணவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினர். இந்த இனிய நாளில் ஆசிரியர்கள் தங்கள் கையால் மாணவர்களுக்கு உணவு பரிமாறியும் அவர்களோடு அமர்ந்து ஒன்றாக சாப்பிட்ட நிகழ்வும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நெகிழச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8