திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

0 576
Stalin trichy visit

திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர், லிங்கா நகர், வெக்காளியம்மன் கோவில்தெரு,
ராமச்சந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பிரட்,பிஸ்கட், புடவை, வேஷ்டி, பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் தொழிலதிபர் கே.என். அருண் நேரு வழங்கினார்… மேலும் அங்கு கூடியிருந்த மக்களின் குறைகளை கேட்டறிந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் இளங்கோ, மோகன்தாஸ் ஒன்றிய செயலாளர் கதிர்வேல், வட்ட செயலாளர்கள் இளையராஜா, ராஜாகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.