திருச்சி ஜங்சன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0 467
Stalin trichy visit

திருச்சி, பிப்.20 திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையில்  ஆக்கிரமிப்புகள் அகற்றும்:-

திருச்சி மாநில நெடுஞ்சாலையான சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி முதல் திருச்சி இரயில்வே சந்திப்பு திண்டுக்கல் பிரியாணி கடை வரை உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அப்புறப்படுத்த கோரி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளில் அகற்றப்படாததால் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி தலைமையில் உதவி பொறியாளர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களை அகற்றினர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அகற்ற முற்பட்டபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. முன்னதாக அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.