மாநகராட்சி வரிகளை யுபிஐ செயலிகள் மூலம் செலுத்தலாம்

0 231
Stalin trichy visit

திருச்சி,பிப்.20  திருச்சி மாநகராட்சி அனைத்து வரிகளையும் UPI செயலிகள் மூலம் எளிதாக செலுத்தலாம்  என்று ஆணையர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் சேவைக் கட்டணம், வரி மற்றும் வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரி தொகைகளையும் Google pay, Paytm, PhonePe ஆகிய செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு அர்பன் இசேவை முனிசிபல் டேக்ஸ் (Tamil Nadu Urban eSevai Municipal Tax) எளிய முறையில் வரிகளை செலுத்தலாம்

மேலும், திருச்சி  மாநகராட்சி, அனைத்து வார்டுகுழு அலுவலகங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையங்களிலும் நேரிலும் வரிகளை செலுத்தலாம் எனவும், வரித்தொகைகளை உரிய காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.