மீண்டும் மீண்டும் நாய்க்கடி: பூ வியாபாரி போராட்டம்

0 316
Stalin trichy visit

திருச்சி, ஏப்.21  மணப்பாறையில்  2 வது முறையாக நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நபர் நகராட்சி அலுவலக வாயிலில் படுத்து போராட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (56). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நகராட்சி அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று அவர் சாலையில் நடந்து சென்ற போது குழந்தைகளை நாய் விரட்டிய போது அதை விரட்ட முயன்ற நிலையில் நாகராஜ் காலை நாய் கடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு இன்று காலை நகராட்சி அலுவலக வாயிலில் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் முறையாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களை நாய்க்கடியில் இருந்து பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.