டால்மியா கல்வி குழுமத்தில் குடியரசு தின விழா
திருச்சி, ஜன.27 டால்மியா கல்வி குழுமத்தில் 77வது குடியரசு தின விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி டால்மியா பள்ளி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 77வது இந்திய தேசிய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆலை செயல் இயக்குநர் விநாயகமூர்த்தி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தாளாளர் கணபதி ராமன், தலைமை ஆசிரியர் மனோகரன் மற்றும் அனைத்து கல்வி குழுமத்தின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆலை அலுவலர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்