குடியரசு தின விழா : திருச்சி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
திருச்சி, ஜன.26 நாட்டின் 77-வது குடியரசு தின விழா – ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்
இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீசாரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டும், சமாதான புறாவை பறக்கவிட்டு பின்னர் 21 பயனாளிகளுக்கு 7லட்சத்து 51ஆயிரத்து, 802 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு என 759பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.