தொட்டியத்தில் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்

0 283
Stalin trichy visit

திருச்சி, டிச.3 தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான 66 வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது,

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக 66 ஆவது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது, இதில் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு அணி, தமிழ்நாடு சாய் விளையாட்டு குழு சேர்ந்த 41 அணிகள் கலந்து கொள்கின்றனர், இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாணவிகள் 5223 மட்டும் கலந்து கொள்கின்றனர், 6,7,8 ஆகிய தேதிகளில் மாணவர்கள் 5260 பேர் கலந்து கொள்கின்றனர், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, இறகு பந்து, கையுந்து பந்து உள்ளிட்ட 12 போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டிகளில் 17 வயதுகுட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர், முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக சான்றுகள் மற்றும் பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்படும், விளையாட்டுப் போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள்
அணி மேலாளர்கள், நடுவர்கள், மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.