மேம்பாலங்களில் முளைத்திருக்கும் மரங்களை அகற்றிட கோரிக்கை

0 259
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26 தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் முளைத்திருக்கும் மரங்களை அகற்றிட வேண்டுமென மக்கள் சக்தி இயக்கத்தில் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான கே.சி.நீலமேகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஆங்காங்கே ஆலமரம், அத்தி, அரசமரம் ஆகிய மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய மரங்கள் அதிகளவில் வளர தொடங்கியுள்ளன.இவற்றினால் பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கும், என மாதந்தோறும் முறையாக பராமரித்து வளர்ந்துள்ள செடி, கொடி மற்றும் மரங்களை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வளராமல் தடுக்க நிரந்தர தீர்வுகாண வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக  கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.