ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை

0 452
Stalin trichy visit

திருச்சி, ஆக.30  ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்
நில வணிகர் நல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

நில வணிகர் நலச்சங்கம் ( தமிழ்நாடு) மாநில பொதுக்குழுமற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று  நடந்தது.

மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அப்துல் நாசர் தலைமை தாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் சுபாஷ், மாநில செயலாளர் நியாஸ் அகமது, மாநில பொருளாளர் எஸ்.ஏ. ரஹீம், மாநில கவுரவ தலைவர் பால்பாண்டியன், மாநில இணை செயலாளர் கலந்தர் பஷீர். மாநிலத் துணைத் தலைவர் குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே கே கார்த்திக், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனாவை நியமித்த
தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற அனைத்து எம்பிக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது,
ரியல் எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் மீடியேட்டர் நல வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வது,சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் பற்றி ஆலோசனை நடத்த மாவட்ட ரீதியாக குழு அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.