மணப்பாறை அருகே கல்வி விழிப்புணர்வு பேரணி
மணப்பாறை அருகே கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியாக சென்ற மாணவ- மாணவிகள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் இனாம்குளத்தூரில் செயல்படும் தனியார் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரி சார்பில் கல்வி விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. கல்வி விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு மாணவ- மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக மாணவர்கள் ஸ்கேட்டில் செல்ல அதைத் தொடர்ந்து மாணவ – மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.