மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த பசுமாடு மீட்பு

0 283
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பசுமாடு மேம்பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் லேசான காயத்துடன் உயிர் தப்பியது. லால்குடி தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை மீட்டனர்.

லால்குடி போலீஸ் காலனியை சேர்ந்தவர் குணா பாண்டியன்.இவர் தனது பசு மாட்டை லால்குடி மேம்பாலத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்று கொண்டிருந்தபோது எழுப்பிய ஹாரன் சத்தத்தை கேட்டு பசு மாடு மிரண்டு மேம்பாலத்தில் கீழே குதித்து பாலத்தின் கீழ் உள்ள மொட்டை மாடியில் தவறி விழுந்தது.இதில் மாட்டிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பிரபு வீரர்கள் மணிகண்டன், சுரேஷ்,விஜய், மனோஜ் குமார், விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.பின்னர் பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.