கிணற்றிலிருந்து இளம்பெண் சடலமாக மீட்பு

0 282
Stalin trichy visit

திருச்சி, ஜன.22  மணப்பாறை அருகே குளிக்கச் சென்ற இளம்பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அயன் பொருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலேகா (வயது 19). இவர் பிளஸ் பனிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி குளித்துவிட்டு வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளிலும், உறவினர் வீடுகளிலும் தேடிவந்த நிலையில் இன்று அதே ஊரை சேர்ந்த சுப்பையா என்பவரது விவசாய கிணற்றில் சந்திரலேகா சடலமாக நீரில் மிதந்துள்ளர்.

இதுகுறித்து வளநாடு போலீசாருக்கும், துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து உடலை மீட்டனர். பின்னர் கிணற்றில் சடலமாக மிதந்தது சந்திரலேகாவின் உடல்தான் என உறவினர்களிடம் போலீசார் உறுதிசெய்த பின் உடலை மணப்பாறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிக்கச் சென்ற இளம்பெண் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மிதந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.