போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0 239
Stalin trichy visit

திருச்சி, ஜன.22  ஊதிய ஒப்பந்த பேச்-சு வார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் நேற்று மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே துவங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 110 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட டி ஏ உயர்வை உடனே வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , 21 மாதமாக ஓய்வு பெற்ற தொழிலாளி வெறும் கையோடு அனுப்புவதை கைவிட வேண்டும், 30000 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், வாரிசுகளுக்கு உடனடி வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சி , கரூர் , புதுக்கோட்டை மண்டல CITU தொழில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

Leave A Reply

Your email address will not be published.