சிறப்பு குறைதீர் முகாமில் 1209 மனுக்கள் மீது தீர்வு
திருச்சி, ஆக. 15 திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூட்டத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் நேரடியாக கொடுத்த 34 மனுக்களை பெற்று மனுக்கள் மீது உரிய தீர்வு பெற சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த ஆணையர் மனுக்கள் மீது உயரி நடவடிக்கை எடுப்பதற்கான தக்க அறிவுரைகளை வழங்கினார். தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட “மக்களுடன் முதல்வர்” முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 1305 மனுக்கள் பெறப்பட்டு, 1209 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம் உள்ள 96 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் அளித்த 1043 மனுக்களில் 279 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.
இம்முகாமில், காவல் துணை ஆணையர் தெற்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.