அன்பில் தர்மலிங்கம் அரசு வேளாண் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் மறு ஒன்று கூடல் விழா

0 493
Stalin trichy visit

திருச்சி – அன்பில் தர்மலிங்கம் அரசு வேளாண் கல்லூரியில் 2005 ஆம் ஆண்டு பயின்று பட்டம் பெற்ற, முன்னாள் மாணவர்களின் மறு ஒன்று கூடல் விழா “Pearls 2005 – Reunion” என்ற பெயரில், இன்று 16-08-2025 கல்லூரியின் கலையரங்கில் வெகு சிறப்பாக நடந்தது.
20 ஆண்டுகளுக்கு முன் படித்து – பட்டம் பெற்ற, 50 க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவர்களுக்குப் பயிற்றுவித்த இக்கல்லூரியின் மூத்தப் பேராசிரியர் டாக்டர் கஜேந்திரன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டு, தங்கள் மாணவர்களை அன்போடு வாழ்த்தினர். வந்திருந்தவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்குச் சிறப்பு செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு வேளாண் அதிகாரிகளாகவும் , வங்கி உயர் அலுவலர்களாகவும், தத்தம் தொழிலில் வெற்றி பெற்றத் தொழில் முனைவோர்களாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள், இருபது ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சந்தித்து கொண்டு, தங்கள் கல்லூரிக் கால அனுபவங்களை அசைபோட்டு பழைய நினைவுகளாகப் பகிர்ந்து கொண்டது, கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave A Reply

Your email address will not be published.