முசிறியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்டம் முசிறி கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர்சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை முசிறி கோட்டாட்சியர் ஆரமுததேவசேனா
கொடியசைத்து துவக்கி வைத்தார்.முசிறி கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் இடையே வழங்கியும் சென்றனர்.முசிறி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் துவங்கிய பேரணி முசிறி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.பேரணியில் வருவாய்த் துறை ஊழியர்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.