மணப்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி, ஜூலை 3 மணப்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி சாலை, திண்டுக்கல் சாலை, கோவில்பட்டி சாலை, மதுரை சாலை, கடைவீதி உள்ளிட்ட நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்ற வருகின்றது. ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பலரும் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.
இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை முறையான அதிகாரிகள் அகற்றிட வேண்டும் என்பதுடன் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.