திருச்சியில் வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த முதியவரை தாக்கி பணம் பறித்த கொள்ளையர்கள் – சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை!

0 477
Stalin trichy visit

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன். இவரது சகோதரர் மனோகரன் (65) வழக்கம்போல் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் மனோகரனை அடித்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

மனோகரன் அவரை பிடிக்க சென்றபோது லாரியில் தள்ளியதால் படுகாயமடைந்த மனோகரன் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மனோகரன் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.