இந்தியன் ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு பாரத தரிசன சுற்றுலா ரெயிலை இயக்க ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி வருகிற 30ந் தேதி மதுரையில் இருந்து “மகாளய அமாவாசை சிறப்பு காசி கயா யாத்திரை சிறப்பு ரெயில்” இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், சென்னை எக்மோர் வழியாக செல்கிறது.
முதலில் அயோத்தி ராமஜென்ம பூமி தரிசித்தல், கயாவில் மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிண்டம் செலுத்துதல், காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசம், அலகாபாத் திரிவேணி சங்கமம், கொல்கத்தா உள்ளூர் பகுதிகளை சுற்றி பார்த்தல் மற்றும் விஜயவாடா கனகதுர்க்கா சக்தி பீடம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்கிறது.
12 நாட்கள் கொண்ட இந்த ரெயில் பயணத்தின் போது அனைத்து வேளைகளிலும் ரெயிலில் சைவ உணவு சமைத்து வழங்கப்படுகிறது. மற்றும் வெளியிடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு, தங்குமிடம், ரெயில் பயண கட்டணம், உள்ளூர் போக்குவரத்து கட்டணத்தை சேர்த்து தலா ஒருவருக்கு ரூ.11 ஆயிரத்து 340 ஆகும். இந்த பயணத்திற்கான டிக்கட்டுகளை திருச்சி ரெயில் நிலையத்தில் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சிறப்பு ரெயில் குடும்பச்சுற்றுலாவாக புறப்பட உள்ளது. இதில் மத்திய மாநில அரசு ஊழியார்கள் விடுமுறை பயண சலுகையை பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவிற்கு 8287931974 என்ற தொலைபேசி எண்ணிலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய www.irctctourism.com என்ற இனையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.