வங்கி கடன் அட்டையை புதுப்பிப்பதாக கூறி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி

0 13
Stalin trichy visit

திருச்சி, ஆக.26  திருச்சி கிராப்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகிம் இவர் ஒருதனியார் வங்கியின் கடன் அட்டை வைத்திருந்தார். கடந்த 19-ந் தேதி அப்துல்ரசி முக்கு செல்போனில் பேசிய மர்ம நபர், தான் வங்கி அதி காரி பேசுவதாகவும், உங்களுடைய கடன் அட்டையை புதுப்பிக்க இருப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும், கடன் அட்டையை புதுப்பிக்க இணையதளத் துக்கு சென்று ஒருசெயலியை திறந்து அதில் அட்டையின் விவரங்களை பதிவு செய்யுங் கள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அப்துல்ரகிம், செயலியை திறந்து அட்டை விவரங்களை அளித்துள் ளார். பின்னர் சில நிமிடங் களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட் சத்து 20 ஆயிரம் எடுக்கப் பட்டுவிட்டது. பின்னர் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய் யப்பட்டுவிட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்துல்ரகிம் திருச்சி மாநகர சைபர்கிரைம். போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.