சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.24 கோடி உண்டியல் காணிக்கை

0 53
Stalin trichy visit

திருச்சி பிப்.12 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ 1 கோடியே 24 லட்சம் ரொக்கம், 01 கிலோ 479 கிராம் தங்கம், 02 கிலோ 181 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை.

சக்தி தலங்களில் முதன்மையானதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.

அந்த வகையில் கடந்த 15 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் தலைமையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் திருக்கோவில் மண்டபத்தில் கணக்கிடும் பணி நடைப்பெற்றது.

இதில் கடந்த 15 நாட்களில் ரூபாய் 1 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 775 ரூபாய் ரொக்கமும், 01 கிலோ 479 கிராம் தங்கமும், 2 கிலோ 181 கிராம் வெள்ளியும், அயல் நாட்டு நோட்டுகள் 113ம், அயல் நாட்டு நாணயங்கள் 940 ம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என கோவில் இணையானையர் சூரிய நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.