சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.59 கோடி உண்டியல் காணிக்கை

0 59
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17  திருச்சி, ஜூலை 17  சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.1.59 கோடி காணிக்கை 2 கிலோ 145 கிராம் தங்கமும் கிடைத்தது

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண் டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக இந்து சமய அறநி லையத்துறை இணை ஆணையரும், இக்கோவிலின் தக்காரு மான ஞானசேகரன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், மயிலாடுதுறை துணை ஆணை யர் ரவிச்சந்திரன், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடர மண சுவாமி கோவில் உதவி ஆணையர் ராஜேஸ்வரி, சமய புரம் மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் சுமதி, மண் ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னி லையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் உண்டியல்களில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 74 ஆயிரத்து 181 ரொக்கமும், 2 கிலோ 145 கிராம் தங்கமும், 3 கிலோ 106 கிராம் வெள்ளியும், மேலும் வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள் 274, வெளிநாட்டு நாணயங்கள் 952 மற்றும் பொருட்களும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.