திருச்சியில் வாலிபர் கட்டையால் அடித்துக்கொலை : நண்பர் கைது

0 57
Stalin trichy visit

திருச்சியில் வாலிபர் கட்டையால் அடித்துக்கொலை நண்பர் கைது
திருச்சி ஏர்போர்ட் காம ராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஹ்மான் பக்ருதீன் கபூர் (வயது 25). இவரது நண்பர் ஏர்போர்ட் வி.ஓ.சி. நகரை சேர்ந்த ரபீக் (40). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17-ந்தேதி கே. சாத்தனூரில் நடந்த ஒருவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
அப்போது, குடிபோதை யில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரபீக், ரஹ்மான் பக்ருதீன் கபூரை தகாத வார்த்தைகளால் திட்டி, மரக்கட்டையால் தாக்கினார். இதில்ரஹ்மான் பக்ருதீன் கபூருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச் சைக்காக திருச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைக் கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன் தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ரபீக்கை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.