கிராமப்புற மதிப்பீடு வரைபடம் : வேளாண் மாணவிகள் விளக்கம்
திருச்சி, மார்ச் 20 திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டம், வேளாண் அலுவலகத்திற்கு முன்பு வேளாண் உதவி இயக்குநர் உஷாராணி தலைமையில் தனலட்சுமி சீனிவாச பல்கலைக்கழக மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு மூலம் கிராமத்தை வரை படமாக வரைந்து விளக்கினர். இதில் கிராம விவசாயிகள், வேளாண் அலுவலர் கனிமொழி மற்றும் விவசாய உதவி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான திட்டங்களை விளக்கி கூறினார்கள். மேலும் இயற்கை விவசாயம் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டுதல், நவீன விவசாயம் போன்ற முறைகளை விளக்கி கூறி, அதனை பின்பற்றும்படி பரிந்துரை செய்தனர்.