பள்ளிகளில் வெப்ப அலையை சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0 33
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வெப்ப அலையை சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலநிலை மாற்றம் காரண மாக எல்-நினோ எனப்படும் வெப்ப அலை மேலும் வலுப் பெறும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித் துள்ளனர். இதனால், வரும் தாட்களில் வெயிலின் தாக்கம் பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே,தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள் ளிகளிலும், வெப்ப அலையை சமாளிப்பதற்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும்என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொ டர்பாக, பள்ளிக்கல்வி இயக் குளரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலை சூழ்நிலைக னால் பள்ளி மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் நலனை உறுதி செய்ய, தகுந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
அதன்படி, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்களது மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்துடன் இணைந்துள்ள வானிலைமையத்திடமிருந்து தங்கள் பள்ளி அமைந்துள்ள வட்டாரம், கிராமம் குறித்த வானிலை சார்ந்த விவரங் களை தினமும் பெற்று, அவர்களின் அறிவுரையின் படி செயல்பட வேண்டும்.

மேலும், பள்ளி அமைந் துள்ள வட்டாரம், கிராமம் குறித்த வானிலை விவரங் களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் பெறு வதற்கு ஏதுவாக, வட்ட பேரி டர் மேலாண்மை மையத்து டன். ஒருவாட்ஸ்-அப்மூலம் குழுவாக இணைப் இணைப்பதற்குண் டான பணியினை முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்ப டுத்தி தர வேண்டும். அன் றாடவானிலை முன்னறிவிப் புகள், வெப்ப அலை எச்சரிக் கைகள் மற்றும் இதர வானிலைதொடர்பான அறி விப்புகளை தவறாது அறிந்து கொள்ள தேவையான டிக்கைகளை மேற்கொள்வ வேண்டும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் கடுமையான வெப்ப அலை ஏற்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப் பட்டால், அதுகுறித்த தக வலை உடனடியாக பெற்று, பள்ளி மாணவர்களின் பாது காப்பு மற்றும் நலனை முன் னிறுத்தி தேவையான அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற் கொள்ள வேண்டும். சூழ்நி லையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வா கத்தின் அறிவுரைகள் மற்றும் நடைமுறையில் உள்ள அரசு வழி காட்டு தல் சுளுக்கு இணங்க, பள்ளிகளுக்கு விடு முறை அறிவித்தல் உள்ளிட்ட டும். நடவடிக்கைகளை மேற் கொள்ள தலைமையாசிரியர் கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு போது மான குடி நீர் வசதி, நிழலான ஓய்விட வசதி, வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்த் தல் உள்ளிட்ட வெப்ப அலை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே. அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களும் உடனடியாக தங்கள் மாவட் டத்திலுள்ள பள்ளிகளுக்கு இந்த அறிவுறுத்தல்களை தெரிவித்து, அவை முழுமை யாக நடைமுறைப்படுத்தப்ப டுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.