திருவெறும்பூரில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

0 73
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள அருணபுரி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38). இவர் காரைக்காலில் உள்ள ஓ.என். ஜி.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இந்தநிலையில் கோவிந்தராஜ் காரைக்காலுக்கு வேலைக்கு சென்ற நிலையில் ரம்யா நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளை திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைகள் தொழிற்சாலை பகுதியில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு துவாக்குடி பெல் நகரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கினார். பின்னர் பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு மாடி யில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகைகள் திரு டப்பட்டு இருந்தது.

இதேபோல் திருச்சி பொன்மலைப்பட்டி 5-வது தெரு தென்றல் நகரை சேர்ந்தவர் டேவிட் (53). இவரதுமனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் கடந்த 18-ந் தேதி கேரளா விற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். உள்ளே சென்று பார்த்த / போது, பீரோவில் இருந்த 38 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாகபாதிக்கப்பட்ட 3பேரும் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம் பவஇடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர்.

விரல் ரேகை நிபுணர்கள் திருட்டு நடைபெற்ற வீடுகளில் பதி வான தடயங்களை சேகரித்த னர். மேலும் அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப் பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து ரகசிய மாக விசாரணை நடத்தி வரு கின்றனர். திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.