மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து

0 230
Stalin trichy visit

திருச்சி, ஆக.15  நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி கோயில் அன்னதான மண்டபத்தில் இன்று நடைபெற்ற சமபந்தியில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவரும், திருச்சி மாநகரக் கழகச் செயலாளருமான,
மு. மதிவாணன் சமபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
நிகழ்வில் உடன் திருக்கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், பகுதி செயலாளர் மோகன், மாவட்ட நிர்வாகிகள் அ. த. த. செங்குட்டுவன், மூக்கன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை, வட்ட செயலாளர்கள் சரவண செல்வன், இளங்கோ, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.