தெற்கு மாவட்ட தி.மு.க விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா
திருச்சி திருவெறும்பூர் தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் விவசாய அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டம் தி மு க திருவெறும்பூர் தொகுதியில் விவசாய அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திருவெறும்பூர் தொகுதியில் சமத்துவ பொங்கல் வைத்தனர் . திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் கழகத்தின் விவசாய அணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் பானை வைத்து பொங்கல் வைத்தனர்

அதில் பொங்கல் பொங்கி வரும் போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டு பாடினர்.
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொங்கல் பரிசு வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்
இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ் நீலமேகம் சிவாக்குமார் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி கங்காதரன் நகரக் கழகச் செயலாளர் காயம்பு
பேரூர் கழகச் செயலாளர்கள் தங்கவேலு ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்