கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

0 238
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 19 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளனூர் பகுதியில் 50 அடி ஆழ கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென மாயமானார். சடலமாக மீட்ட புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள். லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று நண்பரர்களுடன் சேர்ந்து கொண்டு வெள்ளனூர் முத்துக்குளம் ஏரிக்கரை ஓரமாக இருந்த 50 அடி ஆழ கிணற்றில் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென மாயமானார். இது குறித்து சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை கட்டுப்பாட்டுறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சென்னை கட்டுப்பட்டு அறையிலிருந்து புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பாரதி யாகவோ திராவிடன் வீரர்கள் ராபர்ட் கென்னடி, அருண்ராஜ், நவீன் தண்டாயுதபாணி, பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 50 அடி ஆழ கிணற்றில் தேடிப் பார்த்தபோது அதில் சிறுவன் தரணியை சடலமாக மீட்டனர். பின்னர் லால்குடி காவல்துறையினர் சிறுவனின் உடலை ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னால் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.