வக்பு சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 441
Stalin trichy visit

திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி  தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர்கள் முகமது சித்திக்,க.முபாரக் அலி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட செயலாளர் மதர்.Y.ஜமால் முகமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மண்டல செயலாளர் நியமத்துல்லா கலந்து கொண்டார்.

மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் மற்றும் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி தலைவர் I.சேக் முகமது ஆகியோர்கள் ஒன்றிய அரசின் இந்த சட்டத்தினை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர்கள்  Y.ரஹீம், தளபதி அப்பாஸ், மாவட்டச் செயலாளர்  N.G. சதாம் உசேன், மாவட்ட பொருளாளர் பிச்சை கனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S. அப்துல் காதர் (பாபு ),மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ், வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ. சாதிக் பாஷா, கிழக்கு தொகுதி தலைவர் I.சபியுல்லா,மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சர்க்கரை மீரான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், சுற்றுச்சூழல் அணி தலைவர் ரஹ்மத்துல்லாஹ், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் KSA. ரியாஸ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள்,அணி,தொகுதி கிளை நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.