அரைவட்டச் சாலை : முதற்கட்ட ஆய்வுப்பணி

0 11,312
Stalin trichy visit

திருச்சி, ஆக. 24  திருச்சி அரைவட்டச் சாலையானது திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து திருச்சி – சிதம்பரம் சாலை, திருச்சி – சென்னை சாலை மற்றும் திருச்சி – நாமக்கல் சாலை ஆகியவற்றை இணைத்து திருச்சி – கரூர் சாலையில் இணைகிறது.

இச்சாலை திருச்சி அசூரில் தொடங்கி கல்லணை, இலால்குடி வழியாக பூவாளூர் புறவழிச்சாலையில் முடிந்து மறுபடியும் மண்ணச்சநல்லூரில் இருக்கும் புறவழிச்சாலையில் தொடங்கி வாத்தலை வழியாக ஜீயபுரம் பாதையை அரைவட்ட சாலையில் இணைக்கும் இடத்தில் முடிகிறது.

இதன் முதற்கட்ட ஆய்வுப்பணிகளை செந்தில் கண்காணிப்புப் பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திருச்சி இலால்குடி அருகில் உள்ள மணக்காலில் இரயில்வே மேம்பாலம் தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் ஆய்வினை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் வாத்தலை, மண்ணச்சநல்லூர், பூவாளூர், இலால்குடி, கொள்ளிடக்கரை பகுதியிலும் அரைவட்ட பகுதியினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கண்ணன், கோட்டப் பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திருச்சி, புகழேந்தி, உதவிக் கோட்டப் பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திருச்சி, சிட்டிபாபு, உதவிக் கோட்டப் பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, இலால்குடி, மற்றும் கணபதி உதவிப் பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, இலால்குடி, அவர்கள் உடனிருந்தனர். நேர்பாடு விவர அறிக்கை பணிகளை கண்காணிப்புப் பொறியாளர் , இலால்குடியில் ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.