குழந்தைகள் பாதுகாப்பு குழு செயல்பாடுகள் குறித்து பயிற்சி

0 355
Stalin trichy visit

திருச்சி, ஆக. 24  திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாரம் முள்ளிப்பாடி தேவ கிருபை சமூகப்பணி மையத்தில் குடும்ப அடிப்படையிலான மாற்று பராமரிப்பு முறையை வலுப்படுத்தும் குறித்த பயிற்சி மலையடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலகுமார் தலைமையில் நேற்று (ஆக.23)  நடைப்பெற்றது.

தேவகிருபை சமூகப்பணி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சியின் நோக்கம் குறித்து மைய இயக்குநர் ஐசக் அருளப்பன் பேசினார். குழந்தைகள் குடும்ப சூழலில் வளரும் சூழலை உருவாக்குவதில் கிராம அளவிலான பொறுப்பில் பணிபுரியும் நிர்வாகிகளுக்கு குடும்ப மாற்று முறை பராமரிப்பு குறித்தும் மாற்று குடும்பம் பராமரிப்பு திட்டம் மற்றும் குடும்பத்தை வலுப்படுத்தும் முறைகள் குறித்து தேவ கிருபை சமூகப்பணி மையம் திட்ட அலுவலர் இசபெல்லா, குழந்தைகள் பாதுகாவலர்களின் அரவணைப்பில் வளரும் சூழலுக்கான நடவடிக்கை எடுப்பது குறித்து மிராக்கள் பவுண்டேசன் அலுவலர் ஆல்பர்ட் ஜஸ்டீன், அரசு பார்வையில் குடும்ப அடிப்படையிலான மாற்று பராமரிப்பு முறை வலுப்படுத்துதல் கிராம , வட்டார, மாவட்ட அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு செயல்பாடுகள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு  ஆகியோர்  பயிற்சி அளித்தார்கள்.

இந்நிகழ்வில்  மலையடிப்பட்டி ஊராட்சிக்குட்பட பள்ளி தலைமையாசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கிராம சுகாதார செவிலியர் மற்றும் சமூக நலக் துறை விரிவாக்க அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.