மணப்பாறை அருகே கிராம ஊராட்சி இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு

0 120
Stalin trichy visit

திருச்சி, ஜன.7 மணப்பாறை அருகே கிராம ஊராட்சி இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம்.  ஆட்டோ, வேன்களும் நிறுத்தம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து இன்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை.

ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.