தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற திருச்சி மாநகர் மாவட்டக்குழு கூட்டம்…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற திருச்சி மாநகர் மாவட்டக்குழு கூட்டம் பெருமன்ற பொதுச் செயலாளர் மரு. அறம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ம.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் கி.சதீஷ் குமார் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் கொண்டுவந்துள்ள ஒரே நாடு ஒரே மொழி இந்தியை தேசிய அலுவல் மொழியாக ஆக்கும் திட்டத்திற்கு குடியரசுத் தலைவர் கையெழுத்து இடக்கூடாது, தமிழக அரசு பள்ளிக் கல்வியில் கொண்டு வந்துள்ள கலைப் போட்டிகள் கலைவிழாக்கள் திட்டத்தினை வரவேற்கிறோம், அதற்காக பயிற்சிகள் வழங்கிடும் பகுதிநேர பயிற்றுநர்களை படிப்படியாக ஆசிரியர்களாக்கி பள்ளிக் கல்வியில் இசை, நடனத்தை சேர்த்து, அவர்களை நிரந்தரமாக பணியமர்த்தி கலைப் பண்பாட்டை செழுமையாக வளர்த்திட ஆவண செய்திடல் வேண்டும். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றிய அரசு தாய்மொழி தமிழை பயிற்றுமொழியாக சேர்த்திட வேண்டும், தமிழாசிரியர்களை நியமித்திட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள DAV பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்பை தடுத்து நிறுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேட்டப்பட்டது. தொடர்ந்து வரும் டிசம்பர் 11, பாரதி பிறந்த நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாட திட்டம் வகுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நிறைவாக மாவட்டச் செயலர் கி.சதீஷ் குமார் நன்றி கூறினார்.