வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் சிறுதானிய உணவு விழா

0 220
Stalin trichy visit

திருச்சி, பிப்.26 தாப்பாய் அரசு நடுநிலைப்பள்ளியில் சிறுதானிய உணவு விழா. வேளாண்மை மாணவர்கள் ஏற்பாடு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாப்பாய் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு விழா சிறப்பாக நடைபெற்றது.தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கல்லூரியின் இறுதி ஆண்டு வேளாண்மை மாணவர்கள் முன்னெடுத்து,வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலத்துறை உதவி இயக்குநர் (வேளாண்மை) ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கேழ்வரகு,கம்பு, தினை,சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் – சிறுதானிய லட்டு, பாயசம், உப்புமா, உள்ளிட்டவற்றை தயாரித்து காட்சிப்படுத்தினர்.

உதவி இயக்குநர் சிறுதானியங்களின் ஆரோக்கிய நன்மைகள், நீர்ச்சத்து குறைவான நிலைகளிலும் விளையும் தன்மை, விவசாயிகளுக்கு தரும் பொருளாதார பலன் ஆகியவற்றைப் பற்றி உரையாற்றினார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறுதானிய உணவுகளை சுவைத்தனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களிடம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டு விழா நிறைவுற்றது.

Leave A Reply

Your email address will not be published.