திருச்சி மாநகராட்சி 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்

0 181
Stalin trichy visit

திருச்சி, பிப். 26 திருச்சி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிதி குழு தலைவர், கவுன்சிலர் முத்துச்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் விபரம்

2026 – 2027 ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடு. வரவு 1248.37 கோடி. செலவு 1355.12 கோடி. பற்றாக்குறை 106.75 கோடி. மாநகராட்சி ஊதியம் 42.31 %. பழுது மற்றும் பராமரிப்பு
செலவினம் 19.78 %.

தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சியில் உள்ள முக்கியமான சாலைகளில் புராதன (Heritage Lamps) தெருவிளக்குகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இட வசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் கோட்டம் ஒன்றிற்கு தலா ரூ.1.00 கோடி மதிப்பீட்டில், மொத்தம் 5 கோட்ட அலுவலுகங்களுக்கும் ரூ.5.00 கோடி செலவில்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலையேராங்களில் குவியும் தூசுகள் உடனடியாக அகற்றப்பட்டு, நகரினை தூசியில்லா நகரமாகவும், ஆரோக்கியத்துடன் வாழவல்ல நகரமாகவும் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள்வீட்டு கழிவு நீரை உய்யக்கொண்டான் வாய்க்கால் கலப்பதை தடுத்து மாநகராட்சி புதைவடிகால் குழாய்களில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படும்.

விடுபட்ட அனைத்து தெருக்களுக்கும் தெருப்பெயர் பலகைகள் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள், வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படும் மற்றும் சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இம்மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள தெரு விளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 4000 எண்கள் 40 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2.00 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்குவதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் உரிய அலுவலக தளவாடங்கள் வழங்கப்படும் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.