அய்யம்பாளையத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு முகாம்

0 263
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் உள்ள அய்யம்பாளையம்,
திருப்பைஞ்ஞீலீ மற்றும்  நெ.2.கரியமாணிக்கம் ஆகிய மூன்று கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
நெ.2 கரியமாணிக்கம் ஊராட்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி,
அய்யம்பாளையம் ஊராட்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர் பத்மாவதி, திருப்பைஞ்ஞீலீ ஊராட்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி ஆகியோர் இந்த திட்டம் குறித்து சிறப்பு உரை ஆற்றினார்கள்.

வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் தென்னை கன்றுகள் 100 சத மானியத்திலும், கைத்தெளிப்பான் ரூ.750/- மானியத்திலும், பேட்டரி தெளிப்பான் 50 சத மானியத்திலும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

விதை சான்று துறை சார்பில் விதை ஆய்வாளர் பிரகாஷ் துறை சார்ந்த உரை ஆற்றினார்.

தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாஸ்கர், பாபு, ஆனந்து, பாலாஜி, பன்னீர்செல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர் வரதராஜன் ஆகியோரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை விற்பனை துறை, கால்நடை துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்த அலுவலர்களும் முன்னோடி விவசாயிகள் பலரும் திரளாக இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.