டிச.20,21 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்
திருச்சி, டிச.19 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளி லும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத் தப் பணிகள் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, 9 தொகுதிகளிலும் நாளை (டிச20), டிச.21 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெ றவுள்ளது. அந்தந்தப் பகுதி வாக்குச் சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்புமுகாம் நடைபெறும்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற் றுள்ள பதிவுகளில் திருத்தங்கள், இட மாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர் அல்லது தகுதியுள்ள குடிமக்களுக்கான படிவங்கள் – 6 அல்லது 8 ஆகிய படிவங்களுடன் உறுமொழிப்படிவமும் பூர்த்தி செய்து முகாம் இடத்தி லேயே சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தகுதியான வாக்காளர் கள் இந்த சிறப்பு முகாமை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.