வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, நவ.5 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நேற்று (நவ.4) தொடங்கியது. அதன்படி திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.