மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

0 284
Stalin trichy visit

 

திருச்சி, ஆக.31  திருச்சி, ஆக.31 திருச்சி மாவட்டம்,  முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியை சேர்ந்த ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு உடல் பரிசோதனை செய்து சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு புதுப்பித்தல், தனித்துவம் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை உதவி உபகரணங்களுக்கான பதிவு உதவி சலுகைக்கான பதிவு குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார், குழந்தைகள் நல மருத்துவர் ரமேஷ் கண் மருத்துவர் கீதா உளவியல் மருத்துவர் திவ்யா மனவளர்ச்சி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் செய்து சிகிச்சைக்கான பரிந்துரைகளை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அமுதா (பொறுப்பு) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களான இளையராஜா, சின்னத்துரை, தேவகி, மஞ்சுளா மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.