உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 414
Stalin trichy visit

திருச்சி, செப்.16 திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.29க்குட்பட்ட அண்ணாநகர், அக்பர்தெரு ஆகிய பகுதியில் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும், முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாநகராட்சி அலுவலர்கள், அரசுத்துறைஅலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.