திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடக்கம்
திருச்சி, ஜூன் 7 திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 96-வது தமிழ்நாடு மாநில அளவிலான 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவி னருக்கான தடகள போட்டிகள் இன்று (ஜூன் 7)தொடங்கியது. ஜூன் 9 வரை நடைபெறும் இப் போட்டிகளில், 1,500 வீரர், வீராங் கனைகள் பங்கேற்க உள்ளனர். முதல் நாளான இன்று (ஜூன் 7) மதியம் ஹாமர் த்ரோ, போல் வால்ட், நீண்ட தொலைவு நடை போட்டி ஆகியவை நடைபெற்றது.
நாளை (ஜூன் 8) காலை 6.00 மணி முதல் போட்டிகள் நடைபெறும், அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் மாலை 4.30 மணிக்கு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் தமிழ்நாடு தடகள சங்க தலைவருமான தேவாரம், தடகள சங்க மாநிலச் செயலாளர் லதா, திருச்சி மாவட்ட காவல் ஆணையர் காமினி ஆகியோர்தொடங்கி வைக்கிறார்.
திருச்சி மாவட்ட தடகள சங்கத் தலைவர் மயில்வாகனன், உள்ளிட்டோர் பலர் கலந்துகொள்ள உள்ளனர். நாளை மறுநாள் (ஜூன் 9) நிறைவு விழா நடைபெற உள்ளது என்று திருச்சி மாவட்ட தடகள சங்கம் செயலாளர் D. ராஜு தெரிவித்துள்ளார்.