பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி : மணப்பாறையில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

0 171
Stalin trichy visit

திருச்சி, நவ.15  பீகாரில் என்டிஏ கூட்டணியினர் மெகா வெற்றி பெற்றதால் மணப்பாறையில் பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பாஜக திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை மண்டலம் சார்பில் பீகார் மாநிலத்தில் என்டிஏ கூட்டணியினர் வெற்றி பெற்றதை முன்னிட்டு மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இது மணப்பாறை நகர தலைவர் வீ.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் இணைந்தார்கள்.

இந்த  விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் தீபக், மாலா நல்லசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் லலிதா அழகப்பன், மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி, ஊடகப்பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் லட்சுமணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி கண்ணன், அமைப்புசாரா பிரிவு மாவட்ட செயலாளர் வீரப்பன், நகர பொதுச்செயலாளர்கள் குமார், ராஜா பொருளாளர் மணிவேல், நகரச் செயலாளர் ஜீவானந்தம், புல்லட் சின்னச்சாமி, சோடா லட்சுமணன், டெய்லர் சேகர், முன்னாள் நிர்வாகி பூபதி, ராஜா, ராஜு மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.