மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக்கூட்டம்
திருச்சி, ஜூன் 25 தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வாயிலாக ஆண்டு தோறும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 3, 5 மற்றும் 8 – ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது அவ்வாறு நடத்தப்படும் அடைவுத் தேர்வின் தரவரிசை மாநில அளவிலும் மாவட்ட அளவில் வட்டார அளவிலும் பள்ளிஅளவிலும் மாணவன் அளவிலும் வரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது
அதன் அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் ஜூன் 23, 24 நாட்களில் சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், திருச்சி நகரம் , திருவரம்பூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய வட்டாரங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு ஆய்வினை மேற்கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பின்னூட்டமாக தகவல்களைப் பெற்றும் தரத்தின் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொண்டார்
தரவரிசையில் பின்தங்கிய தலைமையாசிரியர்கள் அதற்காக தங்கள் வருத்தத்தை தெரிவித்தது குறிப்பிட்டு பேசிய அமைச்சர் அவர்கள் அவர்களது உண்மை தன்மையை பாராட்டியதோடு அவரது முயற்சிக்கு எதிரில் துணை நிற்பதாக கூறினார்கள்.
கற்றல் அடைப்பு திறனை முழுமையாக மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் மாணவர்கள் வாழ்வியலில் விழுமியங்களை நன்கு அறிந்து எதிர்காலத்து மிகச் சிறந்த மனிதர்களாக வருவார்கள் அதற்காக பாடுபடுகின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தரவரிசையின் அடிப்படையில் மிகவும் பின்தங்கிய தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஆய்வுக் கூட்டத்திற்கு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.