பாலஸ்தீனில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

0 192
Stalin trichy visit

பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கி தலைமை தாங்கினார்

இந்நிகழ்வில் SDTU மாநில செயலாளர் முகமது ரபீக்,தெற்கு மாவட்ட செயலாளர்கள் தளபதி அப்பாஸ், ஏர்போர்ட் மஜீத், உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.